Monday, October 16, 2006

கடவுளின் தற்காலப் பிரச்னை

1

ஒரு சித்திரை கத்தரி வெயில் தினத்தன்று
நகருக்குள் புகுந்த கடவுளுக்கு நீர் சுளுக்கு.
சிகிச்சைக் கேட்டு அனேகர் வீட்டுக் கதவுகளை
வலுக்கத் தட்டிக் கொண்டிருந்தார் அவர்.
கடவுளின் தாவிப்புக்கு வருத்தம் கொள்ளாமல்
மெகா தொடர் குறித்த கவலையில் ஆழ்ந்திருந்தார்கள் மக்கள்.
சுமுகமாக குடும்பம் நடத்த விடாமல் சதிச் செய்யும் சூன்யகாரி குறித்து புகார் சொன்ன பிள்ளைகளை அழைத்து
கர்மா பற்றி விளக்கிக் கொண்டிருந்தார் .
ஓப்படி ஒருவளின் இம்சை நினைத்து விசனத்தில் இருந்தவளுக்கு
கடவுள் வருகை அஜீரணத்தில் திணற வைத்தது.
நீர் சுளுக்கால் புண்ணாகிப் போன தன் ஆண் குறியை
தன்னிரு விரலிடுக்கில் வைத்து வாகாக ஆட்டிக் கொண்டே இருந்தது அவருக்கு சுகமளிப்பதாக இருந்தது.
இதற்கிடையில் தன் நீர் சிளுக்குப் பற்றி பொய் பிரச்சாரம் கிளப்பி விடுவதாகச் சொல்லி அவதூறு வழக்கொன்று நான்கு பேர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்திருந்தது இன்று.





2





தன் வழக்கு தொடர்பான விஷயம் சேகரிக்க
ஒரு செல் போன் தேவைப்பட்டது கடவுளுக்கு.
2300,1106,3230,1108 பற்றி தொழில் நுணுக்கங்களை
சந்தையில் கேட்டறிந்த கடவுள்
கலர் மொபைல் வாங்கியதில் குஷியானார்.
சர்வ நேரமும் பரபரப்பில் இயங்கும்
வழக்கறிஞர் ஒருவரை தன் வழக்கில்
ஆஜராகும் படி கேட்டதற்கிணங்கி
பல கட்டங்களைத் தாண்டி ஒப்புக் கொண்ட பரபர வக்கீல்,
எந்தத் தகவலையும் குறுஞ்செய்தியில்
அறிந்து கொள்ளுமாறு கட்டளையிட்டார்.
ஒப்பந்தப்படி சகேங்தப் பாஷையில்
எஸ்.எம்.எஸ் செய்யத் தவறியமைக்காக
ஒருமுறை நேரடி பேச்சில்
கடவுளை கடிந்து கொண்டார் வக்கீல்.
இனி வழக்கில் நீடிப்பது குறித்து மறு பரிசீலனைக்கு
ஆட்படுத்திவிட வேண்டாமென்று எச்சரித்தர்.
குறுஞ்செய்தி தட்டச்சு செய்வது குறித்து
கடவுளின் அறியாமை அன்றைய நாளேட்டில்
பெரும் இருந்தது.
குறுஞ்செய்தி அனுப்பத் தெரியாத
இவரா உங்களை துன்பத்திலிருந்து
விடுவிக்கப் போகிறாரென எதிர் கட்சியின்
கொ.ப.செ. தொடுத்த சவால் கடவுளை சற்று
சங்கோஜத்தில் தள்ளிவிட்டது.
குறுஞ்செய்திக்காக தன் இணைப்பை
சலுகை திட்டத்தின் கீழ் மாற்றிக்கொண்ட கடவுள்
தினமும் ஒரு நூறு தகவல்கள் அனுப்பும்
வேளையில் மும்முரமானார்.
கடவுளின் கை விரல்கள் குறுஞ் செய்தியனுப்பும்
தந்திரத்தை கற்றுதேர்ந்த பிற்பாடு
பிரச்னை வேறு கோணத்தில் கிளம்பியது.
இப்போதெல்லாம் கடவுளுக்கு
பல தவறான தடங்களிலிருந்து
பலான குறுஞ் செய்திகள்
வந்த வண்ணம் உள்ளன.
கடவுளின் இப்போதைய தற்காலிகப் பிரச்னை
ராங்கால் ஆசாமிகளை எவ்வாறு
மடக்கிப் பிடிப்பது என்பதில்தான்.




3




இது மாதிரியான புகார்கள்
தினமும் ஏராளமாக வருவதால்
தினறிப் போய் இருக்கிறோம் என்று கடவுளிடம் தெரிவித்தார்
ஒரு காவல் துறை உயர் அதிகாரி.
மக்களை காப்பாற்றுவதற்கே நேரம் போதாமல்
தின்டாடும் சமயத்தில் கடவுளின் இந்த முறையீட்டுக்காக
எங்கே போய் முட்டிக் கொள்ள என்ற அதிகாரி
இது தன் எல்லைக்குள் வரவில்லை என்று கை விரித்தார்.
படைத்தல் ரட்சித்தல் காத்தல் அழித்தல் என்று பல வருடம்
ஊதாரிதனமாய் வாழ்க்கை நடத்திட்ட கடவுளுக்கு
சட்டம் ஒழுங்கு பாஷைகள் புரிபடாமல் போனதால் இப்போதெல்லாம் கையாலாகாதவனாய் காலத்தை கழித்து கொண்டே வருகிறார் கடவுள்.

No comments: